Kutti revathi biography for kids



குட்டி ரேவதி

குட்டி ரேவதி

பிறப்புரேவதி சுயம்புலிங்கம்
சென்னை, தமிழ்நாடு, &#;இந்தியா
தொழில்எழுத்தாளர்
வகைகட்டுரைகள், கவிதைகள்

குட்டி ரேவதி (Kutti Revathi) இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த சென்னையை வசிப்பிடமாகக் கொண்ட ஒரு பெண் கவிஞர் ஆவார்.[1] சித்த மருத்துவரான இவர் பாடலாசிரியர், பெண்ணிய ஆர்வலர், திரைப்பட இயக்குநர் மற்றும் மருத்துவர் என பன்முகங்களுடனும் சமகாலத்தில் எழுதிவரும் பெண் படைப்பாளிகளுள் கவனிக்கத்தக்க ஒருவராகவும் இயங்கிவருகிறார்.

கவித்துவமும் சிந்தனைத் தெளிவும் நிறைந்தவர். இவர் மூன்று கவிதை நுால்களை வெளியிட்டுள்ளார்.பெண்களுக்கான இலக்கிய காலாண்டு இதழான பணிக்குடம் என்ற முதல் தமிழ் பெண்ணிய இதழின் ஆசிரியராகவும் உள்ளார். இவ்விதழில் பெண்ணிலக்கியவாதிகளின் படைப்புகளே அதிகம் வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது. பல இலக்கிய சந்திப்புகள் மற்றும் சக மாணவர்களின் கவிதைத் தொகுப்புகளை மதிப்பாய்வு செய்தபின்னரே தனது சொந்த படைப்புகளில் சிலவற்றை குட்டி ரேவதி உருவாக்கத் தொடங்கினார்.

Yvonne crittenden robertson

தலித் பெண்ணியம் என்பதை சித்தாந்த வடிவில் கட்டமைப்பதும் களப்பணிக்குச் செயல்படுத்துவதும் தான் இந்தியாவில் பெண்களின் உரிமைகளை முழுமையான வடிவில் பெற்றுத் தரும் என்று நம்புபவர். சாதிய மறுப்பும் ஒழிப்பும் தான் பெண்ணுடலை அடிமைத் தளையிலிருந்து விடுவிக்கும் என்ற உணர்வுடன் தலித் பெண்ணியத்தைத் தனக்கேயான மொழியில் சித்தாந்தப்படுத்தி வருபவர்.

இதற்கு தமிழகத்தில் உருவெடுத்த பெண் கவிஞர்களின் ’உடல் அரசியல்’ மொழியும் எழுச்சியும் முக்கியமான பங்களிப்பு என்கிறார். சிற்றிதழ் இயக்கம் மற்றும் நவீனத் தமிழ் இலக்கியம் வழி உருவெடுத்தவர். இந்நூற்றாண்டின் முக்கியமான பெண்ணியச் செயல்பாடு என்பது தனித்த பெண்ணியச் சிந்தனைகளைக் கட்புல படிமங்களாக பரிணமிக்கச்செய்தலே[தெளிவுபடுத்துக] என்ற தன் தீவிர நம்பிக்கையின் படி முழுமூச்சாக ஆவணப்படத்துறையிலும் திரைப்படத்துறையிலும் இயங்கிவருபவர்.

சிறகு என்ற ஒரு திரைப்படத்தையும் குட்டி ரேவதி இயக்கியுள்ளார்.[2]

இவர் தனது சக மாணவர்களின் கவிதைத் தொகுப்புகள் தொடர்பான திறனாய்வு இலக்கியக் கூட்டங்களை நடத்தியுள்ளார். இவர் தனது சுய படைப்புகள் குறித்தும் பணிகளைத் தொடங்கினார். பள்ளிப்படிப்பிற்குப் பிறகு உலகின் மிகப் பழமையான மருத்துவ முறையாகவும், தமிழ்நாட்டைத் தாயகமாகவும் கொண்ட சித்த மருத்துவத்தைப் பயின்று இளங்கலைப் பட்டமும் பெற்றார்.

அவர் சென்னையில் உள்ள மெட்ராசு வளர்ச்சிசார் கல்வி நிறுவனத்தில் (Madras Institute of Development Studies) மருத்துவம் சார்ந்த மானிடவியலில் தனது முனைவர் பட்டத்திற்கான ஆய்வுப் படிப்பை மேற்கொண்டார்.

Feni biography

இந்தியா டுடே என்ற பத்திரிக்கையால் வழங்கப்பட்ட எதிர்கால இலக்கியத்தின் முகங்கள் (சிகரம் 15) என்ற விருதினைப் பெற்றார். சாகித்ய அகாதெமி அமைப்பினரால் ஆம் ஆண்டில் இந்தியாவில் உள்ள இலக்கியவாதிகளை சந்திப்பதற்கான உதவித்தொகையைப் பெற்றார். இவர் சமகாலத்திய தமிழ் கவிஞராக இருந்து கருத்து முரண்பாடுகளைக் கொண்ட, வாதத்துக்கிடமான பல கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.[3][4][5]

வெளியிட்ட நூல்கள்

[தொகு]

கவிதை நூல்கள்

[தொகு]

  • பூனையைப் போல அலையும் வெளிச்சம்[6] ()
  • முலைகள்[7]()
  • தனிமையின் ஆயிரம் இறக்கைகள் ()
  • உடலின் கதவு ()
  • யானுமிட்ட தீ ()
  • மாமத யானை ()
  • இடிந்த கரை ()
  • அகவன் மகள் ()
  • காலவேக மதயானை ()
  • அகமுகம் ()

சிறுகதை நூல்

[தொகு]

  • நிறைய அறைகள் உள்ள வீடு , முதல் பதிப்பு (), பாதரசம் பதிப்பகம்

கட்டுரை நூல்

[தொகு]

  • காலத்தைச் செரிக்கும் வித்தை ()
  • நிழல் வலைக்கண்ணிகள் ()
  • ஆண்களும் மையப்புனைவைச் சிதைத்தபிரதிகள் ()

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]